சென்னையில் பிரபல மருத்துவமனையில் நர்ஸுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த டாக்டர்... திருப்பதிக்கு தப்பியோடிய நிலையில் கைது!

 
நர்ஸ்

சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த உல்ஹாஸ் பாண்டுரங்கி (58) என்பவர் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார். 

இவர் வளசரவாக்கத்தில் தங்கியிருந்து மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன், அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மருத்துவர்

இதையடுத்து, பாதிக்கப்பட்ட செவிலியர் சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மருத்துவர் மீது பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் மருத்துவரை போலீசார் விசாரணைக்கு அழைத்த போதும், அவர் விசாரணைக்கு வராததால், போலீசார் தீவிரமாக அவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், மருத்துவர் உல்ஹாஸ் பாண்டுரங்கி திருப்பதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், விரைந்து சென்ற திருப்பதி போலீசார், திருப்பதியில் வைத்து மருத்துவரைக் கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

கைது

தனியார் மருத்துவமனையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web