கடைசி நேரத்துல தவிக்காதீங்க... தீபாவளிக்கு 14,086 சிறப்பு பேருந்துகள்... இன்னமும் முன்பதிவு நடைபெறுது!

 
பேருந்து யுபிஐ

கடைசி நேர பரபரப்பைத் தவிர்த்திடுங்க. ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை... அதனால கிடைக்கிற பேருந்தில் பயணிக்கலாம் என்று அஜாக்கிரதையாக இருக்காதீங்க. பலரும் அப்படி யோசிக்கிறதால பேருந்துகளின் கட்டணம் கடைசி நேரங்களில் எக்குத்தப்பாக உயர்கிறது. அரசு பேருந்துகளின் தரம் இப்போதெல்லாம் தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் வகையில் தான் உள்ளது. இன்னமும் கூட முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இம்மாதம் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளிக்கு முந்தைய விடுமுறை நாட்களுக்கான பயண தேதிகளுக்கு ரயில்களில் டிக்கெட்கள் முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீல பேருந்து

அக்டோபர் 28ம் தேதி முதல் அக்டோபர் 30ம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சென்னையில் இருந்து 11,176 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் இருந்து 2,910 அரசு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்து

3 நாட்கள் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் சுமார் 5.83 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செல்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  நவம்பர் 2 முதல் 4ம் தேதி வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 9,441 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.  
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web