மிஸ் பண்ணாதீங்க... அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு அக்.30 வரை காலநீட்டிப்பு!
தூத்துக்குடி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சேர்க்கை மாணவர்கள் சேர்க்கைக்கு அக்.30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2024-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், தற்போது 30.10.2024 வரை நேரடி சேர்க்கை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக சென்று www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தூத்துக்குடி, கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையம், வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்து நேரடி சேர்க்கை நடைபெறும்.
மாநிலம் முழுவதும் உள்ள சேர்க்கை மையங்களின் பட்டியல், தொழிற் பயிற்சி நிலையங்களின் விவரம் மற்றும் தொழிற் பிரிவுகள் குறித்த விவரம் மேற்குறித்த இணையதளமுகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்புஃபத்தாம் வகுப்புஃ2021-ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50ஐ விண்ணப்பதாரர் Debit Card/Credit Card/Net Banking / G-Pay வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும்.
நேரடி சேர்க்கையில் சேர விரும்புவோர் 8-ஆம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு நகல்களுடன் தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்திலுள்ள தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலையம் (0461-2340133), வேப்பலோடை(0461-2267300), திருச்செந்தூர் (9499055812) மற்றும் நாகலாபுரம் (9080585078) அரசு தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு நேரில் வருகை தர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750ஃ- கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத் தேவையான விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுவதாகவும்,
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு இலவச உண்டி, உறைவிட வசதியும் உள்ளது எனவும், ஐடிஐ-யில் சேரும் தகுதியுள்ள மாணவ, மாணவியர்களுக்கும் தமிழக அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும்.
நேரடி சேர்க்கையில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 30.10.2024 வரை நேரடி சேர்க்கை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!