வாங்குன கடன கொடுக்க மாட்டியா??.. வாட்ச்மேனை பிளாண் போட்டு தீர்த்துக் கட்டிய கும்பல்!

 
ரவி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள மன்னார்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் ரவி (வயது 54) என்பவர் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் ஓக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இரண்டு நாட்களுக்கு முன், அவர் முகத்தில் காயங்களுடன் காட்டில் இறந்து கிடந்தார்.

கொலை

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேடசந்தூர் டிஎஸ்பி இலக்கியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே, இக்கொலை தொடர்பாக கரட்டுப்பட்டி காலனியில் வசிக்கும் நவீன் (வயது 30), பாண்டி (வயது 25), நவநீதன் (வயது 19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது

விசாரணையில், நவீனிடம் ரவி கடன் வாங்கி நீண்ட நாட்களாகியும் அதை செலுத்தாமல் இருந்தது தெரியவந்தது. மேலும், நவீன் பணம் கேட்டபோது, ​​தன்னுடன் வந்த பாண்டியையும், நவநீதனையும் திட்டியுள்ளார். இதனால், ரவி மீது ஆத்திரமடைந்த மூவர் கும்பல், அதிகாலை 3 மணியளவில் குடிபோதையில் கல்குவாரிக்கு சென்று ரவியை கல்லால் அடித்து கொன்றனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!