திரௌபதி அம்மன்கோவிலை திறக்க உத்தரவிட முடியாது!! அதிரடி!!

 
திரௌபதி அம்மன் கோவில்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் மேல்பாதி கிராமத்தில்  திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் நடப்பாண்டில் நடைபெற்ற திருவிழாவில் தலித் இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.   இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட  நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சில அரசியல் கட்சியினர் அரசியல் ஆதாயத்திற்காக இந்த நிலைமையை ஏற்படுத்தி இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.  

திரௌபதி அம்மன் கோவில்

அதே நேரத்தில்  திரௌபதி அம்மன் கோவிலில் வழிபடுவதற்கு இந்து  ஆதிதிராவிடர் சமூகத்தினரை அனுமதிப்பதும் இல்லை. இது குறித்தும்   விழுப்புரம் கலெக்டரிடம்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள இந்த கோவிலுக்குள் குறிப்பிட்ட சமூகத்தினரை வழிபடுவதற்கு அனுமதிக்காமல் மறுப்பு தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் , கலெக்டர் கலந்து கொண்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.  ஆனால் இதுவரை எந்த சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை.  இதற்கிடையில் ஜூன் 7ம் தேதி விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.   அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயிலில் பட்டியலின மக்கள் வழிப்பட எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கமும் அளித்துள்ளார்.  

உயர்நீதிமன்றம்

மாவட்ட நிர்வாகம் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும்  பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என மற்ற சமூகத்தினர் கூறிவரும் நிலையில் தான்   சீல் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில்  திரௌபதி அம்மன் ஆலயத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதால்  கோயிலை திறக்க உத்தரவிட முடியாது .  மனுதாரர் அறநிலையத்துறையை  அணுகலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூஜை செய்வதற்காக மட்டும் கோயிலை திறக்கவேண்டும் என கூறிய மனுவின் விசாரணையில் இந்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இதன் மூலம் பூஜை செய்வதற்காக மட்டும் கோயிலை திறப்பது குறித்து அறநிலையத்துறை தான் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் வழக்கை முடித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web