அமைச்சர் துரைமுருகன் திடீர் மருத்துவமனையில் அனுமதி!

 
துரைமுருகன்


 
தமிழகத்தில்  நீர்வளத்துறை அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வருபவர் அமைச்சர் துரைமுருகன். இவர் வயது மூப்பு  காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார்.

துரைமுருகன்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக துரைமுருகனுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு  அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படும் போதெல்லாம் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று  உடல் பரிசோதனை செய்து கொள்கிறார். அந்த வகையில்  சமீபத்தில் கூட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார்.

துரைமுருகன்

இந்நிலையில் இன்று வேலூரில் இருந்து சென்னைக்கு திரும்ப இருந்த போது அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத்  தெரிகிறது. அவரது அருகில் இருந்த ஆதரவாளர்கள் உடனடியாக அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web