அம்மா...டி!! மின்கட்டணம் ரூ7,71072/- !! வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி!!

 
மின்சாரம்

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு பலருக்கும் கரண்ட் பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்கும் நிலைமைக்கு கொண்டு விடுகிறது. இந்த கூத்து இந்தியா முழுவதும் இப்படி தான் என்பதை போல் தான் நிகழ்வுகள் நடைபெறுகின்றன . தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.   தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி வீடுகளுக்கு மாதம் தோறும் 200யூனிட் மின்சாரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ள்ளார்.

மின்சாரம் eb

இந்நிலையில்   ஒரு குடும்பத்திற்கு 7 லட்சத்து 71 ஆயிரத்து 72 ரூபாய் மின் கட்டணம் வந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மங்களூரு அடுத்த உல்லால் பகுதியில் வசித்து வருபவர்   சதாசிவ ஆச்சார்யா. இவர் வீட்டிற்கு மாதாந்திர மின்சார பயன்பாட்டிற்கான கட்டணம் வந்துள்ளது. முன்னதாக, தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் வீட்டிற்கு வந்து மின்சாரம் பயன்படுத்தியதற்கான பில் தொகையை வழங்கி சென்றுள்ளனர். அதில், கடந்த மாதம் சதாசிவ ஆச்சார்யா குடும்பத்தினர் 99 ஆயிரத்து 338 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாக காட்டப்பட்டுள்ளது.

மேலும் அதற்கான தொகை 7 லட்சத்து 71 ஆயிரத்து 72 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அந்த ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சதாசிவ ஆச்சார்யாவின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். இதனையடுத்து மின்னனு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார கட்டணத்திற்கான தொகை 7 லட்சத்திற்கும் மேல் வந்துள்ளதாகவும், அதை சரி செய்து தருவதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். இதனால் சற்று நிம்மதி அடைந்த சதாசிவ ஆச்சார்யா குடும்பத்தினர், அதனைத் தொடர்ந்து வந்த 2,833 ரூபாய் கட்டணத்தை செலுத்திச் சென்று உள்ளனர்.
மின்சாரம்

மேலும் இது குறித்து சதாசிவ ஆச்சார்யாவிடம் கேட்டபோது மின்சாரப் பயன்பாடு கட்டண பில்லை கண்டபோது, தலை சுற்றிப் போனதாகவும், அதிகாரிகள் அதை சரி செய்த கொடுத்த பிறகு நிம்மதி அடைந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், தங்களுக்கு மாதந்தோறும் சுமார் 3000 ரூபாய் மட்டுமே மின் கட்டண பில் வந்த நிலையில், திடீரென 7 லட்சம் ரூபாய்க்கான பில் வந்த உடன் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web