இபிஎஸ் கனவில் ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்... முதல்வர் ஸ்டாலின் விளாசல்!

 
ஸ்டாலின் இபிஎஸ்


 
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில்  திமுக எம்எல்ஏ கீ.வேணுவின் இல்ல திருமணவிழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர்  ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அங்கு ஸ்டாலின் ஆற்றிய உரையில் “ தமிழ்நாட்டின்  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக பற்றியும் , திமுக கூட்டணி பற்றியும் கூறிய பல்வேறு விமர்சனங்களை கூறி வருகிறார்.   மக்களால் ஓரங்கட்டப்பட்ட கட்சியாக அதிமுக உள்ளது. திமுகவின் செல்வாக்கு வளர்ந்து கொண்டு வருவதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. செல்லாக் காசாக இருக்கும் பழனிச்சாமி, திமுகவின் செல்வாக்கு சரிந்து கொண்டிருப்பதாக  பேசி வருவது வேடிக்கை தான்.  திமுக கூட்டணி உடையப் போகிறது என கூறி  இபிஎஸ் ஜோசியகாரராகவே மாறிவிட்டார்.

இபிஎஸ்


விரத்தியின் உச்சியில் ஜோசியராக மாறிய பழனிசாமியை பார்த்து பார்த்து நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எங்களுடைய கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணியல்ல. எங்கள் கூட்டணி என்பது பதவிக்கு வர வேண்டும் என உருவாக்கப்பட்ட கூட்டணியல்ல. கொள்கைக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. எங்கள் கூட்டணிக்குள் விவாதம் நடக்கும். எங்களுக்குள் பேச்சுக்கள் நடக்கலாம். விவாதங்கள் ஏற்படுவதால் விரிசல் ஏற்பட்டு விடுகிறது என யாரும் கருதி விடக்கூடாது. பக்கத்து வீட்டில் என்ன தகராறு என எட்டிப்பார்ப்பது போல, பக்கத்து கட்சியில் என்ன நடக்கிறது என பார்த்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தன்னுடைய கட்சியை வளர்ப்பதற்கு வக்கில்லை, வளர்ந்த நம் திமுக அரசை பார்த்து  ஜோசியம் செய்து கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின்
திமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலும்,  ஆட்சியில்  இருக்கும்போதும்  மக்களை சந்தித்து அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதை கேட்டு அறிந்து செயல்பட்டு வருகிறோம். சென்னையில் மழை பெய்த நாட்களில் முதல்வராக நானும், துணை முதல்வர்  தம்பி உதயநிதியும், அமைச்சர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைவரும் மக்களை தேடி தேடி வந்து  குறைகளை கேட்டறிந்தார்கள். பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்கள் இது திமுக.
சென்னையில் மழை வந்தவுடன் சேலத்தில் சென்று ஒதுங்கிக் கொண்டவர் எடப்பாடி. ஆட்சியில் இருக்கும் போதும்,  ஆட்சியில் இல்லாத போதும் வரமாட்டார். ஏதோ கனவில்  ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒன்றை மட்டும் நான் உறுதியாக கூறிக் கொள்கிறேன். திமுக 2026லும் வரலாறு காணாத  பெரும் வெற்றி அடையும்” எனக் கூறினார்.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!