அதிர்ச்சி... ஆவினில் காலாவதியான ரசகுல்லா விநியோகம்... பொன்னுசாமி ஆதங்கம்!
ஆவின் நிறுவனத்தில் பால் முகவர்களுக்கு வலுக்கட்டாயமாக தேதி காலாவதியான ரசகுல்லா விநியோகிக்கப்படுவதாக ச.பொன்னுசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர் அதில், “மதுரை ஆவினில் (ஆரப்பாளையம் மண்டலம்) 28.10.2024 பால் பாக்கெட்டுகள் கொள்முதலுக்கு நேற்று 27.10.2024 மாலை பணம் செலுத்த நேரில் சென்ற ஒவ்வொரு பால் முகவர்களுக்கும் தீபாவளி இனிப்பான ஆவின் ரசகுல்லா கேன்கள் இரண்டினை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர்.
அதனை வாங்க மறுத்த பால் முகவர்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகள் ஆர்டர் போட மறுத்த காரணத்தால் வேறு வழியின்றி பால் முகவர்கள் அந்த ரசகுல்லா கேன்களை வாங்கி தங்களின் பாலகங்களுக்கு கொண்டு வந்த பிறகு தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏனெனில் பால் முகவர்களுக்கு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வழங்கிய ஆவின் ரசகுல்லா கேன்களில் ஒன்று காலாவதியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ளது. (தயாரிப்பு தேதி 06.09.2024 / காலாவதி தேதி 20.09.2024), மற்றொன்று காலாவதியாகி இரண்டு நாட்களாகிறது. (தயாரிப்பு தேதி 11.10.2024 / காலாவதி தேதி 25.10.2024) இவ்வாறு ஆவின் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வழங்கிய ஒரு மாதத்திற்கு முன்பே காலாவதியான ஆவின் ரசகுல்லா கேன்களை விற்பனை செய்ய முடியாமலும், ஆவினில் திருப்பி கொடுக்க முடியாமலும் பால் முகவர்கள் சொல்லெனா துயருக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் மற்றும் பால், பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்துவது, தட்டுப்பாடின்றி அதன் விநியோகத்தை மேற்கொள்வது தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ஆண்டுதோறும் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகைகளை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.
காரணம் தீபாவளி இனிப்பு, கார வகைகளை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் கொள்முதல், அவை தயாரிப்பதற்கான பணியாளர்கள் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றின் மூலம் எண்ணற்ற முறைகேடுகள் பல செய்து தங்களின் கஜானாவை நிறைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மட்டுமே ஆவின் அதிகாரிகள் செயல்பட்டு வருவதால் தான் இந்த நிலை தொடர்கிறது, இதனால் பால் முகவர்களும், பால் உற்பத்தியாளர்களும் ஆண்டுதோறும் பலிகடாவாக்கப்பட்டு வருவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், காலாவதியான ரசகுல்லா கேன்களை பால் முகவர்களுக்கு வலுக்கட்டாயமாக வழங்கிய ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
மக்களே... ஆவின் நிறுவனம் என்று கிடையாது.. எந்த பொருட்களை வாங்கினாலும் அதன் காலாவதி தேதிப் பார்த்து வாங்கி பயன்படுத்துங்க. கொண்டாட்டங்களில் உங்கள் உடல்நலன் மீது அக்கறை செலுத்தி விழிப்புணர்வுடன் இருங்க.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!