பெரும் சோகம்... தமிழ் சினிமா பிரபலம்... உடல் நலக்குறைவால் திடீர் மரணம்...!

 
எடிட்டர் வெங்கடேஸ்வரராவ்

தென்னிந்திய திரைப்படங்களின் பிரபல எடிட்டர்  வெங்கடேஸ்வர ராவ் நேற்று ஜூன் 20 பிற்பகல் 12 மணிக்கு காலமானார்.  இவருக்கு வயது 72. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  2023 ம் ஆண்டு தெலுங்கு திரையுலகிற்கு போதாத காலம். பல மூத்த பிரபலங்கள், மேதைகள், ஜாம்பவான்கள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வருகின்றனர். கலாதபஸ்வி கே விஸ்வநாத், நடிகை ஜமுனா, இளம் கதாநாயகன் நந்தமுரி தாரக ரத்னா ,  நடிகர் சரத்பாபு, வி.வி.விநாயக், ஸ்ரீனு வைட்லா, ஏ.எஸ்.ரவிக்குமார் சௌத்ரி, பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி போன்ற இயக்குனர்களுக்கு வழிகாட்டிய சாகர், வாணி ஜெயராம்  என  காலமானவர்களின் பட்டியல் நீண்டு வருகிறது. இதனால் தெலுங்கு திரையுலகமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.  

எடிட்டர் வெங்கடேஸ்வரராவ்

 

எடிட்டர் நாகேஸ்வரராவ் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர்.  முன்னாள் முதல்வர் கருணாநிதி, என்டிஆர், நாகேஸ்வர ராவ் ஆகியோரின் திரை பயணங்களில் அவர்களுடன் இணைந்து பணிபுரிந்தவர்.   இவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், தலைவர்கள் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

rip

பி வெங்கடேஸ்வர ராவ் மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலகப்புகழ் பெற்ற நடிகர் சர்வபௌமா நந்தமுரி தாரக ராமராவ் நடித்த 'யுகாந்தர்' படத்துடன் 'மொண்டி மொகுடு பெண் பெல்லம்', 'கேப்டன் கிருஷ்ணா', 'இத்தாரு அசத்தியுலே', 'முட்டை' போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை வெங்கடேஸ்வர ராவ் எடிட் செய்துள்ளார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web