நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த பிரபல இசையமைப்பாளர்.. குவிந்த பிரபலங்கள்!

 
சுஷின் ஷ்யாம்

மலையாளத்தின் முன்னணி இசையமைப்பாளரான சுஷின் ஷ்யாம் தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்துள்ளார். சுஷின் ஷ்யாமின் இசையில் சமீபத்தில் வெளியான படம் ``போகைன்வில்லா''. இந்த படத்தில் நடிகர் குன்சக்கோ போபன் மற்றும் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளனர். இதுமட்டுமின்றி, `மஞ்சும்மாள் பாய்ஸ்', `ஆவேசம்' போன்ற படங்களின் மூலம் இந்த ஆண்டு ஹிட் இசையையும் கொடுத்தார்.

``போகன்வில்லா'' படத்தின் புரமோஷன் ஒன்றில், ``இந்தப் படத்தைத் தொடர்ந்து இந்த வருடம் வேறு எந்தப் படத்தையும் கமிட் செய்யவில்லை. உறுதி செய்யப் போவதில்லை. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அடுத்த வருடம் வருவேன்!' கூறியிருந்தார். அவரது அறிவிப்பு அந்த நேரத்தில் மாலிவுட்டில் பேசப்பட்டது. இவருக்கும் அவரது நீண்ட நாள் காதலி உத்ரா கிருஷ்ணாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

மலையாள நடிகை பார்வதி ஜெயராமனின் உறவினர் உத்ரா கிருஷ்ணா. சுஷின் ஷ்யாமும் உத்ராவும் சென்னையில் ஒருமுறை சந்திகத்த போது காதல் மலர்ந்துள்ளது. உத்ரா தான் தன் காதலை சுஷின் ஷ்யாமிடம் கூறியுள்ளார். சுஷின் ஷ்யாமின் ரசிகர்களும் ``திருமணத்திற்காக சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கிறார்...'' என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த திருமண நிகழ்ச்சியில் ஃபகத் ஃபாசில், நஸ்ரியா உள்ளிட்ட மாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web