11 ஆண்டு கால வரலாற்றில் மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதன் முறையாக தீபாவளி போனஸ் !
சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்தியா முழுவதும் அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அரசு ஊழியர்களுக்கு 3 % வரை அகவிலைப்படி சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதேபோல் ரேஷன் கடை பணியாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் என பல்வேறு தரப்பில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியது முதல் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் 11 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தற்போது சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நான் எக்ஸிகியூட்டிவ் பணியாளர்களுக்கு ரூ15000 வரை போனஸ் தொகையாக கிடைக்கப்பெறும்.
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியூ - சென்னை மெட்ரோ ரயில் யூனியன் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!