முன்னாள் டிஜிபி மகன் தற்கொலை... பெரும் பரபரப்பு!
சத்தீஸ்கர் முன்னாள் டிஜிபி மகன் துஷார் சுக்லா. இவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து காவல்துறை அதிகாரி சந்திர சேகர் பாண்டே "துஷார் சுக்லா என்ற நபர் தற்கொலை செய்து கொண்டதாக ஹாசிரா மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
#WATCH | Bhopal, Madhya Pradesh: Former Chhattisgarh DGP Shrimohan Shukla's son Tushar Shukla committed suicide.
— ANI (@ANI) October 28, 2024
ACP Chandra Shekhar Pandey says, "PS Kamla Nagar received information on October 26 from Hazira Hospital about the suicide of a person named Tushar Shukla s/o Mohan… pic.twitter.com/RRP8ndz7eL
பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. உயிரிழந்தவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. தற்கொலைக்கான முதன்மைக் காரணம் மன உளைச்சல் என்று சந்தேகம் எழுந்துள்ளது. தற்கொலைக் குறிப்பு எதுவும் காவல்துறைக்கு இதுவரை கிடைக்கவில்லை.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். திடீர் தற்கொலை செய்துகொண்ட துஷார் சுக்லா, சத்தீஸ்கர் முன்னாள் டிஜிபி ஸ்ரீமோகன் சுக்லாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!