ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் விரக்தி.. இளைஞர் விஷமருந்தி தற்கொலை!

 
பிரேம்மதாஸ்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மருங்கூர்  கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் பிரேம்மதாஸ். இவர் விருத்தாசலத்தில் டெலிவரிபாயாக பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் டெலிவரி செய்யப்படும் போது வரக்கூடிய கலெக்ஷனை ஒன்று சேர்த்து, ஆன்லைனில் கடந்த ஒரு சில வாரத்திற்கு முன்பு முப்பது ஆயிரம் பணம் செலுத்தி விளையாடியதாக கூறப்படுகிறது.

 அவ்வாறு விளையாடியவர் முழுவதுமாக பணத்தை இழந்த நிலையில்,  நேற்று சுமார் 8000 ரூபாய் பணத்தை, மீண்டும் ஆன்லைன் மூலமாக விளையாடிய போது பணத்தை இழந்து உள்ளார். இதனால் 38000 பணத்தை இழந்த மன உளைச்சலில், அதிக வீரியம் கொண்ட விஷமருந்தை குடித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு சென்ற நிலையில் அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்கதையாகி வருவதால் முற்றிலுமாக அதனை தடை விதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கோரிக்கை வைக்கிறனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web