’ குட் பேட் அக்லி ’ படத்தில் ஹேண்ட்சம் வில்லன்... !
அஜித் குமாரின் தீவிர ரசிகரும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம்தான், குட் பேட் அக்லி. இந்த படத்தில், நடிகர் அஜித் கைகளில் டேட்டூ, கூலிங் கிலாஸ், பூ போட்ட சட்டை என பல வருடங்களுக்கு பிறகு பார்ப்பதற்கே வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் ஆரம்பித்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுவென முடிந்த நிலையில் தற்போது 2ம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித், கேங்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
#GoodBadUgly 🔥💥#Ajith Sir @SureshChandraa @Adhikravi @MythriOfficial @DoneChannel1 #ForeverGrateful pic.twitter.com/9KYtoQRUzk
— Arjun Das (@iam_arjundas) October 25, 2024
குட் பேட் அக்லி திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத சில நடிகர்கள் இணைந்திருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இணைந்த ஒரு நடிகர்தான், அர்ஜூன் தாஸ். கைதி திரைப்படத்தில் “லைஃப் டைம் செட்டில்மெண்ட்” டயலாக்கை பேசி பிரபலமான இவர், அடுத்து விஜய்யுடன் மாஸ்டர், கமலுடன் கேமியோ ரோலில் விக்ரம் என சில படங்களில் வில்லனாக நடித்தவர். தற்போது கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.
32 வயதாகும் அர்ஜுன் தாஸிடம் பெண்களுக்கு பிடித்த விஷயமே அவரது அடித்தொண்டை குரலும், முரட்டுத்தனமான தோற்றமும்தான். இவர், விஜய்யுடன் நடித்த போது விரைவில் அஜித்துடன் இணையலாம் எனக் கூறப்பட்டது. அதன்படி தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இது குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ், தனது சமூக வலைதள பக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்தது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் தான் முதன்முதலில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்த போது நடிகர் அஜித்தின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், ‘வீரம்’ திரைப்படத்தின் டீசரை கூட நான்தான் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும், தற்போது இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதும் அஜித்தால்தான் என அர்ஜுன் தாஸ் கூறியுள்ளார். அஜீத் , மேலும்தனக்கு வாய்ப்பளித்த ஆதிக், சுரேஷ் சந்திரா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் அர்ஜுன் தாஸ்.
அஜித்தும், விஜய்யும் நல்ல நண்பர்கள் . அர்ஜுன் தாஸ், தனது பதிவில் “மாஸ்டர் படத்தை பார்த்த பின்பு ‘அர்ஜுன், நாம ரெண்டு பேரும் கண்டிப்பா ஒரு படம் பண்றோம்’” என அஜித் தன்னிடம் கூறியதாக தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா, நடிகர் பிரசன்னாவும் இணைந்துள்ளார். இவர்களுடன் புதிதாக அர்ஜுன் தாஸ் நடிக்க இருக்கிறார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!