காலையிலேயே பகீர்... நடுரோட்டில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்.. அலறியடித்த பயணிகள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசுப்பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்த நிலையில், நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்து பேருந்து முழுவதும் எலும்புக்கூடாய் உருக்குலைந்தது.
இன்று காலை பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்தை பொள்ளாச்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார். பொள்ளாச்சியை சேர்ந்த கதிரேசன் என்பவர் நடத்துநராக பணியில் இருந்தார்.
இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், காலை 8 மணியளவில் மயிலேறிபாளையத்தை கடந்து பேருந்து ஒத்தகால் மண்டபம் பாலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.
பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து குபுகுபுவென புகை வந்ததைப் பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சியடைந்து பேருந்தை உடனடியாக சாலையில் ஓரமாக நிறுத்தி விட்டு, உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து கீழே இறங்க செய்தார். அடுத்த சில நிமிடங்களில் பேருந்து தீப்பிடித்து குபுகுபுவென கொளுந்து விட்டு எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் செட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பேருந்தில் பிடித்த தீயை அணைக்க முயன்ற நிலையில், சில மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.எனினும் இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!