இடிந்து விழுந்த அரசு பெண்கள் பள்ளியின் சுற்றுச்சுவர்.. அரசு அதிகாரிகளின் அலட்சியமா?

கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் 7 ஏக்கர் பரப்பளவில் நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 2,700 மாணவிகள் படிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறை மூலம் பள்ளியை சுற்றி 10 அடி உயர சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. சுற்றுச்சுவர் முறையான பராமரிப்பின்றி காணப்பட்டது.
இந்நிலையில் இந்த சுற்றுச்சுவர் நேற்று நள்ளிரவு பயங்கர சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். இரவு நேரத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, காந்தி நகர் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் நேற்று இரவு இடிந்து விழுந்து, சின்டெக்ஸ் தொட்டி, மின்கம்பங்கள், அரசியல் கட்சிகளின் கொடி கம்பம், கல்வெட்டுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளி சுற்றுச்சுவரின் சில பகுதிகள் சுமார் 5 அடி உயரம் மட்டுமே உள்ளது. இதனால் சிலர் இரவு நேரத்தில் பள்ளிக்குள் குதித்து பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இவற்றை முழுமையாக அகற்றிவிட்டு, 10 அடி உயரத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!