பெரும் சோகம்... மகன் உயிரிழந்த செய்தி கேட்டு தந்தையும் மயங்கி சரிந்து உயிரிழப்பு!

 
குண்டகாவி

 

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் 38 வயதான வினய் குண்டகாவி. இவர் , தார்வாரின் உப்பள்ளியில் தனது சொந்த மருத்துவமனை நடத்தி வந்தவர். அவருடைய தந்தை, 88 வயதான வீரபத்ரய்யாவும் ஒரு பிரபல மருத்துவராக பணிபுரிந்தவர்.  அவர் ஹாவேரியில் மருத்துவமனை நடத்தி வந்தார். அக்டோபர்  23ம் தேதி நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார்.

ஆம்புலன்ஸ்

அவருடைய மனைவி மருத்துவர்  என்பதால், உடனே பரிசோதனை செய்துள்ளார். அப்போது வினய் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தது தெரியவந்தது.வினய் இறந்த செய்தி அவரது தந்தை வீரபத்ரய்யாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  மகனின் மரணத்தை தாங்க முடியாமல் துக்கத்தில் கதறி அழுதார். சில நிமிடங்களில் அவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு அவரும் மயங்கி விழுந்தார்.

மாரடைப்பு

அருகில் இருந்த மருத்தவர்கள் உடனே அவருக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்தனர். ஆனால் அவரும்  பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே நாளில் தந்தையும் மகனும் உயிரிழந்த செய்தி அப்பகுதி மக்கள் உறவினர்கள் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!