ஆளுநர் மாளிகை முன் கையெறி குண்டு...மாநிலம் முழுவதும் பரபரப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் நகரில் ஜி.பி. மகளிர் கல்லூரியின் வாசலில் இன்று காலை கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கல்லூரி மணிப்பூர் ஆளுநர் மாளிகையில் இருந்து100 மீட்டர் தொலைவிலும், முதல்வரின் அரசு இல்லத்திலிருந்தும், மணிப்பூர் காவல்துறை தலைமையகத்திலிருந்தும் 300 மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கையெறி குண்டுகள் குறித்து தகவல் கிடைத்ததும் அதனை சுற்றி வளைத்த காவல்துறையினர் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இம்பால் பகுதியில் உள்ள பல கல்வி நிறுவனங்களுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து பணம் பறிப்பது குறித்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
