பரபரப்பு.. ரயிலில் கழன்று ஓடிய என்ஜின்... இறங்கி ஓடிய பயணிகள்!
இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று கன்னியாகுமரி சென்று கொண்டிருந்தது. இந்த விரைவு ரயில் இன்று காலை சுமார் 9 மணிக்கு காட்பாடி அருகே சென்ற போது முகுந்தராயபுரம் - திருவலம் இடையே ரயில் என்ஜின் மற்றும் ரயில் பெட்டிகளுக்கு இடையிலான கப்லிங் திடீரென கழன்று சென்றது.

இதனால் ரயிலின் என்ஜின் மட்டும் தனியாக கழன்று ஓடியது. ரயில் பெட்டிகள் தனியாக பயணிகளுடன் நின்று கொண்டிருந்தது. பிரிந்து சென்ற என்ஜினை மீண்டும் பின்னோக்கி கொண்டு வர ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் பெட்டிகள் தனியாக நிற்கும் நிலையில், சீரமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மற்ற ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
