அதிகாலையிலேயே அதிர்ச்சி... ‘கங்குவா’ படத்தின் படத்தொகுப்பாளர் திடீர் மரணம்.. படக்குழுவினர் அதிர்ச்சி!
தீபாவளி ரேஸ் திரைப்படங்களை விட ரசிகர்கள் சூர்யா நடித்திருக்கும் கங்குவா திரைப்படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தப் படத்தில் சூர்யாவுடன் திஷா பாட்னி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் (43) இன்று அதிகாலை 2 மணியளவில் கொச்சியில் உள்ள பனம்பில்லி நகரில் தனது வீட்டில் உயிரிழந்தார். நிஷாத் யூசுப் காலமான செய்தி கங்குவா படக்குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கங்குவா படம் மட்டுமின்றி டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த தல்லுமாலா படத்திற்கு எடிட்டராக நிஷாத் யூசுப் பணிபுரிந்துள்ளார். சூர்யாவின் அடுத்த படத்திற்கும் எடிட்டிங் பணிகளை நிஷாத் யூசுப் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
