தமிழில் தான் எங்களைத் திட்டுகிறார்... ஆனா சீமான் இப்படி பண்ணிட்டாரே... அமைச்சர் வேதனை!

 
அமைச்சர் அன்பில் மகேஷ்

சீமான் தமிழில் தான் பேசுகிறார். அதே தமிழில் தான் எங்களைத் திட்டுகிறார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவேன் என்று சீமான் பேசி இருப்பது வருத்தமளிக்கிறது என்று அமைச்சர் மகேஷ் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஈரோட்டில் கண்காட்சி ஒன்றை பார்வையிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும். தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்று சொல்ல நாங்கள் தயார். திராவிடம் என்றால் என்ன என்று சொல்ல யாராவது தயாராக உள்ளார்களா? என்று பேசினார்.தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவேன் என்று சீமான் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாத, பிரதிவாதங்களை முன் வைத்து வருகின்றனர்.

சீமான்

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மகேஷிடம், சீமானின் பேட்டி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், “அவர் எதை வைத்துக் கொண்டு இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. நம்முடைய அரசியல் என்று வரும் போது, குறிப்பாக தமிழ்நாடு அரசு என்று வரும் போது அரசியலே கல்வியில் தான் ஆரம்பிக்கிறது. அனைவருக்கும் கல்வி என்று நீதிக்கட்சி ஆரம்பித்தது தான் எல்லாமே.

அன்பில் மகேஷ்

அப்படி வரும் போது, தாய்மொழியை தூக்கி விடுவோம், எடுத்து விடுவோம் என்று சொல்வது உள்ளபடியே வேதனைக்குரியதாக தான் இருக்கிறது. அவர் பேசுவதே தமிழில் தான் பேசுகிறார். எங்களை திட்டுவதும் தமிழில் தான். பாராட்டுவதும் தமிழில் தான் பாராட்டுகிறார். அப்படி பேசுகிறவர் இப்படி பேசி இருப்பது உள்ளபடியே வேதனைக்குரிய ஒன்றாகத்தான் பார்க்கின்றோம்” என்றார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web