தூத்துக்குடியில் கனமழை... அனல்மின் நிலையத்தில் இடி தாக்கி டவர் சரிந்தது!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் அனல்மின் நிலையத்தில் இடி தாக்கி டவர் சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மதுரை செல்லும் மின்பாதையில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நேற்று பிற்பகல் 3 மணி முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில், நேற்று மாலை பெய்த கனமழையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இடிதாக்கி மதுரை பீடர் (டவர்) சரிந்தது.
இதன் காரணமாக மதுரை செல்லும் மின்பாதையில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்து தேங்கி நின்றதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!