அவன் இருந்தா என் பையனுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய வியாசர்பாடி நாகேந்திரன் வாக்குமூலம்!

 
வியாசர்பாடி நாகேந்திரன்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கூறப்படும் பிரபல ரவுடி வியாசர்பாடி நாகேந்திரன், ஆயுள் தண்டனை கைதி என 30 பேர் மீது செம்பாயம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைப்பற்றப்பட்ட குற்ற ஆவணங்களில் வியாசர்பாடி தாதா நாகேந்திரன் வாக்குமூலம் உள்ளது.

ஆம்ஸ்ட்ராங்

அந்த வாக்குமூலத்தில் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலைத் திட்டம் குறித்து வழக்கறிஞர் அருள் என்னிடம் கூறியதாக எனது மகன் அஸ்வத்தாமன் என்னிடம் கூறினார். எனது மகன் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வந்தபோது சந்தித்தான். அதைச் செய்யச் சொல்ல இதுவே நல்ல வாய்ப்பு, செலவை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னேன்.

ஆம்ஸ்ட்ராங்கைத் தீர்க்க ஆற்காடு சுரேஷ் கொலையைப் பயன்படுத்தினோம். ஐஓசி கான்ட்ராக்டர் ஜெயப்பிரகாஷை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் அஸ்வத்தம்மானை கைது செய்ததற்கு ஆம்ஸ்ட்ராங் காரணமானதால் எனக்கு கடும் கோபம் வந்தது. ஆம்ஸ்ட்ராங்  ஆதரவாளரை அழைத்து, "என் மகனுக்கு ஏதாவது ஆச்சுனா, நான் எந்த நிலைக்கும் செல்வேன்" என்று எச்சரித்தேன்.. எனது மகன் அரசியலுக்கு வராமல் இருக்க ஆம்ஸ்ட்ராங் தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web