ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரும் படுகொலை.. உறுதிப்படுத்தியது இஸ்ரேல் ராணுவம்!

 
 ஹாசிம் சபிதீன்

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது, இந்த தாக்குதலில் காஸாவில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஹமாஸுக்கு ஆதரவாக உள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேலை தாக்கியதால், இஸ்ரேல் இப்போது லெபனானை தாக்குகிறது.

இஸ்ரேல் தாக்குதலில்

இஸ்ரேல் ஹிஸ்புல்லாவின் தலைவர்களை கொன்றுவிட்டு ஒருவர் பின் ஒருவராக புதிய தலைவர்களை நியமித்து வருகிறது.அந்த அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதுடன், அந்த அமைப்பின் தளபதிகளும் கொல்லப்பட்டனர். இதனையடுத்து புதிய ஹிஸ்புல்லா தலைவராக ஹாசிம் சபிதீன் தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவார்கள் என இஸ்ரேல் பிரதமர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், புதிய தலைவரையும் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் உறுதியான செய்தியை வெளியிட்டுள்ளது. லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 1550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web