நான் மோடி ரசிகன்!! எலான் மஸ்க் அதிரடி!!

 
எலான் மஸ்க் மோடி

இந்திய பிரதமர்  மோடி  4 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் நியூயார்க்கில் ஐநா சபை சார்பில் நடத்தப்படும் யோகா நிகழ்ச்சிக்கு மோடி தலைமை தாங்குகிறார். அதன்பிறகு  அமெரிக்க  அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார். இருநாடுகள்   இடையே வர்த்தகம், பாதுகாப்பு உட்பட  பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோடி

இதனையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பின்னர் இந்திய வம்சாவளியினர் உடனான சிறப்பு விருந்தில் அவர் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உலக தொழிலதிபர்களை சந்தித்து, இந்தியாவில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகளை பிரதமர் மோடி மேற்கொள்வார் என தெரிகிறது.  அந்த வகையில்  டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.   இந்த சந்திப்பு குறித்து எலான் மஸ்க் மிகவும் உற்சாகத்துடன் பேசினார்.

எலான் மஸ்க்

நான் மோடியின் ரசிகன். இந்த சந்திப்பு ஒரு அருமையாக சந்திப்பு . எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் இந்தியாவிற்காக சரியான விஷயங்களை செய்வதற்கு ஆசைப்படுகிறார் என்பதை கூற முடியும் எனத்  தெரிகிறது.  அடுத்த ஆண்டு நான் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். ஸ்டார்லிங்கை இந்தியாவுக்கு கொண்டுவரவும் காத்திருக்கிறேன்.  ஸ்டார்லிங்க் இணைப்பானது  தொலைதூரம் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு நம்ப முடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன் .பிரதமர் மோடி  சந்திப்புக்கு பிறகு  எலான் மஸ்க் இதனை தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web