30 டன் மருந்து, உணவுப் பொருட்கள்... பாலஸ்தீனத்துக்கு நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா!
பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் மருந்து மற்றும் உணவுப்பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்தாண்டு அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதி தாக்குதலாக ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது.
இந்த போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஓராண்டைக் கடந்தும் பதற்றம் நிலவி வருகிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
போரில் பாதிக்கப்படும் லெபனானுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் 11 டன் மருந்து பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் மருந்து மற்றும் உணவுப்பொருட்களை அனுப்பியது.
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பி உள்ளது. 30 டன் மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய முதல் தவணை உதவி இன்று புறப்பட்டுள்ளது.
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்கள், பால்பொருட்கள், பொது மருத்துவ பொருட்கள் மற்றும் பிஸ்கட்கள் ஆகியவை அடங்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!