“போரை நிறுத்த இந்திய பிரதமர் மோடியால் உதவ முடியும்...” உக்ரைன் அதிபர் பேட்டி!
'இந்திய பிரதமர் மோடியால் உக்ரைன் போரை நிறுத்த உதவ முடியும்' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்திருந்த பேட்டியில், உலகின் செல்வாக்குமிக்க தலைவராக இந்திய பிரதமர் மோடி விளங்குகிறார். அவரால் உக்ரைன் போரை நிறுத்த உதவ முடியும். இது தொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான, அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்திய விளங்குகிறது. உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடு என பல்வேறு சிறப்புகள் கொண்டது இந்தியா.
சர்வதேச அரசியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ரஷ்யாவின் அத்துமீறல்களால் உக்ரைன் மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
வேறு வழியின்றி ரஷ்யா அதிபர் புடின் போரை முடிவுக்கு கொண்டு வருவார். உக்ரைனில் தற்போது குளிர்காலம் துவங்க உள்ளது. இந்த நேரத்தில் உக்ரைனின் மின் நிலையங்கள் மீது ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மின் நிலையங்களை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த இக்கட்டான சூழலில் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவின் கொள்கை மாறினால் உக்ரைனுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். போரை நிறுத்த இந்திய பிரதமர் மோடியால் உதவ முடியும்” என்று தனது நேர்காணலில் உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!