இர்ஃபானை மன்னிக்க முடியாது... மா.சுப்பிரமணியன் ஆவேசம்!

 
இர்பான்

 சமீபத்தில் பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது யூ-டியூப் பக்கத்தில் தனது குழந்தை பிறக்கும் சமயத்தில் எடுக்கப்பட் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தனது குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் மருத்துவர்கள் முன்னிலையில் கத்தரிகோலால் வெட்டுவது வீடியோவில் பதிவாகியிருப்பது  குறிப்பிடத்தக்கது.

இர்பான்

மருத்துவர்கள் இருக்கும் போதே, அவர்களின் முன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய இர்பானுக்கு மருத்துவர் சங்கங்கள் சார்பில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதுகுறித்து விளக்கம் கேட்டு இர்பான் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

மா.சுப்பிரமணியன்
இச்சம்பவம் குறித்து   மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்  “ குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட யூடியூபர் இர்பானை மன்னிக்க முடியாது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு மருத்துவத்துறை சார்பில்  நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது மன்னிக்கக்கூடியது அல்ல., கண்டிக்கக்கூடியதாகும். இந்த விவகாரத்தில் ஏற்கனவே மருத்துவர் நிவேதிதா மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!