‘ப்ளெடி பெக்கர்’ ஹிட்டாகிறதா? திரைவிமர்சனம்!
வாரிசுகள் சொத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ளும் நோக்கத்தோடு மாளிகைக்குள் நுழைகிறார்கள். அந்த வாரிசுகளின் அப்பாவுக்கு இன்னொரு வாரிசு இருக்கிறது. அந்த வாரிசுக்கே தனது சொத்தின் பெரும்பகுதியை உயில் எழுதி வைத்திருக்கிறார். இதனால், டம்மி வாரிசு ஒருவனை ஏற்பாடு செய்து அவனுக்கு சொத்து எழுதிக் கொடுப்பது போல கொடுத்து பின்னர் வாங்கிக் கொள்ளலாம் என்பது அவர்கள் திட்டம்.
இந்நிலையில் மாளிகைக்குள் நுழையும் கவின் அவர்களிடம் சிக்குகிறார். இதில் கவின் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன? வாரிசுகளுக்கு சொத்து கிடைத்ததா? இந்தக் கதையின் ஃபிளாஷ்பேக் என்ன என்பது தான் ‘ப்ளெடி பெக்கர்’ கதை.

மக்களை ஏமாற்றி பிச்சை எடுப்பதாகட்டும், மாளிகையை வியந்து பார்ப்பது, அங்கு வில்லங்கமான நபர்களிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது என நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் கவின். பட ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அந்த மீட்டரையும் கச்சிதமாக பின்பற்றியிருக்கிறார். இவர்கள் தவிர்த்து, கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ரெடின் கிங்க்ஸி, சுனில் சுகதா, அக்ஷயா, திவ்யா, தனுஜ், கவின் எடுத்து வளர்க்கும் குட்டிப் பையன் என மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
மாளிகைக்குள் ஆவியாக அலையும் ரெடின் கதாபாத்திரம் பல படங்களில் நாம் ஏற்கனவே பார்த்தது தான் என்றாலும் இதில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். அதுவும் வொர்க்கவுட் ஆகவே செய்திருக்கிறது.
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் அதன் டெக்னிக்கல் டீம். இந்தப் படத்தின் கதாபாத்திரமாகவே அந்த மாளிகையும் இருக்கிறது. மாளிகையின் பிரம்மாண்டத்தைத் திரையில் கொண்டு வந்திருக்கும் கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரைக்கும், ஒளிப்பதிவாளர் சுஜித் சரங்குக்கும் வாழ்த்துகள். ஜென் மார்ட்டின் இசையும் பாடல்களும் படத்திற்கு பெரிய பலம். அதேபோல, ஒவ்வொரு ரகமான கதாபாத்திரங்களுக்கும் விதவிதமான காஸ்ட்யூம் கொடுத்து அந்த கேரக்டரை சிறப்பாக திரையில் காட்டியிருக்கிறார் ஜெய் சக்தி.

மக்களை ஏமாற்றி யாசகம் கேட்கும் கவின் என கலகலப்பாக தொடங்கும் கதை பின்னர் நகைச்சுவை, த்ரில்லர் பாதையில் பயணிக்கும் கதை கொஞ்சம் கொஞ்சமாக டார்க் ஹியூமர், த்ரில்லர் பாதையில் பயணிக்கிறது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கை மீது பொதுமக்களுக்கு இருக்கும் அலட்சியம், அவர்களின் வாழ்க்கை மீதான பிம்பம் இதெல்லாம் படம் நெடுக பதிய வைத்துள்ளார் இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார்.
முதல் பாதி முழுக்கவே மாளிகைக்குள்ளே நடக்கும் கதை இரண்டாம் பாதியிலும் பெரும்பாலும் அங்கேயே சுற்றுவது அயர்ச்சியைத் தருகிறது. டார்க் காமெடி பல இடங்களில் சிரிக்க வைத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அதுவும் பெரிதாகக் கைக்கொடுக்கவில்லை.
மெதுவாக நகரும் முதல் பாதி, இழுவையாக நகரும் இரண்டாம் பாதி என படம் நகர்ந்தாலும் தீபாவளி ரேஸில் அமரன் படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு ரசிகர்களிடையே ஆதரவு பெறுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
