இனி குளிரு தான்... தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும்!

 
மழை

அக்னி எல்லாம் எங்களை என்னடா பண்ணும் என அக்னி நட்சத்திர காலத்திலும் சுற்றி திரிந்தவர்களை அக்னிக்க் பிறகான காலகட்டம் வெச்சு செஞ்சுட்டு தான் கிளம்பி இருக்கு. கடந்த வாரத்திற்கு முன்பு வரை, 20 வருஷங்களில் இல்லாத வெயில் என வெதர்மேன் ரிப்போர்ட் கொடுத்து கொண்டிருக்க, பல தமிழக மாவட்டங்களில் வெயில் சதத்தைக் கடந்தது. இந்நிலையில், கடந்த வாரத்தில் இருந்து பல மாவட்டங்களில் குறிப்பாக தமிழக கடலோர மாவட்டங்களில் தினம் தினம் மழைச்சாரல் தான்.

பல இடங்களில் வெப்பம் இருந்த இடமே தெரியாமல் போயுள்ளது. தமிழகத்தில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. இந்நிலையில், மழை மேலும் 4 நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் தற்போதுள்ள சூழலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தமிழகத்தின் மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால் இன்றும், நாளையும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இன்று  9 மாவட்டங்களில் கனமழை !! கவனமா இருங்க மக்களே!!

அதே வரும் ஜூன் 29ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

உ.பி கன மழை

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள்,   தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும்.வடதமிழக-தென்ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும்  சூறாவளிக்காற்று  வீசக்கூடும்.இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web