வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் தீபாவளி கொண்டாட்டம்... 600 அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்பு!

 
ஜோபைடன்
 

 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாஷிங்டன்னில் உள்ள வெள்ளைமாளிகையில் தீபாவளி கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் 600 அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். அனைவரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருவதால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  

ஜோபைடன்

இந்நிலையில் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் இந்த வருடமும் தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி கொண்டாட்ட விழாவிற்கு ஜோ பைடன் தலைமை வகித்து, குத்து விளக்கேற்றி தீபாவளியை கொண்டாடினார். இந்த விழாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் 600 பேர் வரை பங்கேற்றனர்.

விழாவில் பேசிய ஜோ பைடன், “அமெரிக்க அதிபராக வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய தீபாவளி வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதில் பெருமை அடைகிறேன். என்னை பொறுத்தவரை இது ஒரு பெரிய விஷயம். செனட்டர், துணைத் தலைவர் மற்றும் ஜனாதிபதியாக தெற்காசியவை சேர்ந்த அமெரிக்கர்கள் என்னுடன் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளனர்.

கமலா ஹாரிஸ் முதல் டாக்டர் மூர்த்தி வரை உங்களில் பலர் என்னுடன் பணியாற்றி இருக்கிறீர்கள். அமெரிக்காவை போல் ஒரு நாட்டில் நான் எனது நிர்வாகத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன்'' என்றார். முன்னதாக சர்வதேச விண்வெளியில் இருந்தபடி சுனிதா வில்லியம்ஸ் பகிர்ந்திருந்த தீபாவளி வாழ்த்து செய்தியும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web