திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலருகே பயங்கர தீ விபத்து... அலறியடித்து பக்தர்கள் ஓட்டம்!

 
திருப்பதி

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் மலை மேல் இருக்கும் கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆனால் அதற்கு முன் கீழ்  திருப்பதியில் அமைந்திருக்கும் ஸ்ரீநிவாசமங்காபுரம், அலமேலு மங்காபுரம், கோவிந்தராஜா சுவாமி கோயில்  என மூன்று கோயில்களை கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றான கோவிந்தராஜா கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது.திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே நூற்றுக்கணக்கான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் சாமி படங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தீவிபத்து

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே சுவாமி படங்கள் விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து  வருகின்றனர்.
நேற்று காலை 11 மணிக்கு  கடையில்   திடீரென தீ விபத்து ஏற்பட்டு குபுகுபுவென  புகை கிளம்பத் தொடங்கியது.  இதனால்  கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள்  அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.  

தீவிபத்து

அதே நேரத்தில்  காற்றும் பலமாக வீசியதால் 3 அடுக்கு மாடிகளிலும் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும்  தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். விபத்திற்கு காரணம் மின்சார கசிவு என்பது தெரிய வந்துள்ளது. கடையில் தீப்பிடிக்க  தொடங்கும்  போதே ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வெளியே வந்ததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web