கேரள பட்டாசு வெடிவிபத்து | முன்பே எச்சரித்து விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு... செயல்படுத்தாத கேரள அரசு!

 
பட்டாசு
 

கேரளத்தில் நேற்றிரவு கோயில் திருவிழாவின் போது பட்டாசுகள் வெடித்து சிதறி ஏற்பட்ட விபத்தில் 154 பேர் காயமடைந்தனர். 8 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், முன்பே கோயில் திருவிழாக்களின் போது பட்டாசுகள் வெடிக்கப்படுவது குறித்து மத்திய அரசு விதிமுறைகளை வகுத்து அனுப்பியிருந்த நிலையில், அதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசின் எச்சரிக்கை விதிமுறைகளை முழுவதுமாக கடைப்பிடிக்காமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்திருந்தால் விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசு கடந்த அக்டோபர் 11ம் தேதியே கோயில் திருவிழாக்களின் போது வெடிபொருள் சட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்து வெளியிட்டு கேரள அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே காசர்கோடு நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் வீரராகவர் கோவிலில் வெடி விபத்து ஏற்பட்டது. 

முன்னதாக கோயில் திருவிழாக்களில் பட்டாசு வெடிப்பது குறித்து கடந்த அக்.11ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட திருத்தங்கள் மூலமாக திருச்சூர் பூரம் உட்பட மாநிலத்தில் உள்ள கோயில்களில் பட்டாசு வெடிப்பது பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்து மத்திய அரசுக்கு மாநில அரசும் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மத்திய அரசின் புதிய முடிவால் திருச்சூர் பூரம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்பது திருவிழாவை பாதிப்படைய செய்யும் என்று கேரள மாநில அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. 

மத்திய அரசு அறிவுறுத்தி இருந்த திருத்தங்களில் முக்கியமானதாக பட்டாசு வெடிகளை சேமித்து வைத்திருக்கும் இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி பூரத்தின் முக்கிய அம்சமான வாணவேடிக்கை ஸ்வராஜ் சுற்றில் கூட நடைபெறாது என்று மாநில அரசு கவலைத் தெரிவித்திருந்தது. 

பட்டாசு வெடிப்பது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு பூரத்தை அழிக்கும் நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியும் என்றும் அந்த கடிதத்தில் கேரள அரசு குறிப்பிட்டிருந்தது. 

இந்தத் திருத்தம் அமலுக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் பலர் காயமடைந்துள்ளதால், புதிய திருத்தத்தின் கீழ் விதிமுறைகள் கடுமையாக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. 

பட்டாசு விதிமுறைகளில் 35 திருத்தங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. கொல்லத்தில் கடந்த 2016ம் ஆண்டு புட்டிங்கல் அனர்த்தம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையின் பரிந்துரையின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

பட்டாசு வெடிக்கும் இடத்துக்கும், பட்டாசு வெடிகளை பதுக்கி வைத்திருக்கும் இடத்துக்கும் இடையே 200 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்பது அந்த அறிவிப்பில் முக்கியக் கட்டுப்பாடு. நேற்றிரவு நடைபெற்ற விபத்தில் தூரம் 45 மீட்டருக்கும் குறைவாகவே இருந்துள்ளது. பூரம் கமிட்டியின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த தூரத்தைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனாலும் மத்திய அரசு இது 200 மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. அந்த அறிவிப்பில் உள்ள மற்றொரு முக்கியமான நிபந்தனை பட்டாசு வெடிக்கும் இடத்தில் உள்ள பேரிகார்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பொதுமக்களைத் தடுப்பு வைத்து நிறுத்தி இருக்க வேண்டும் என்பது. 

மற்ற நிபந்தனைகளாக, அருகில் உள்ளவர்கள் கட்டுப்பாட்டை இழந்து பேரிகார்டில் தாண்டி வந்து நின்றால் பட்டாசு வெடிக்கக் கூடாது.

பட்டாசு

காற்றின் வேகம் 50 கி.மீக்கு மேல் இருந்தால், எந்த சூழ்நிலையிலும் பட்டாசுகளை வெடிக்க கூடாது. 

வெடிகளை வெடிக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு குழாய்களில் பாதி பூமிக்கு அடியில் இருக்க வேண்டும்.

வெவ்வேறு அளவுகளில் குழாய்கள் வழக்கில் குறைந்தபட்சமாக தூரம் 10 மீட்டர் இருக்க வேண்டும்.

மருத்துவமனை, முதியோர் இல்லம் மற்றும் பள்ளிகள் 250 மீட்டர் தூரத்திற்குள் இருந்தால் நிச்சயமாக அனுமதியின்றி அந்த பகுதிக்குள் பட்டாசு வெடிக்கக் கூடாது.

பட்டாசு வெடிக்கும் பகுதியில் இரும்புக் கருவிகள், இரும்புப் பொருள்கள், ஆயுதங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!