காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக் கொலை!! பரபரப்பு!!

 
ஹர்தீப் சிங் நிஜார்


கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இவர்  பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  பஞ்சாபி ஆதிக்கம் நிறைந்த பகுதியில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹர்தீப் சிங் நிஜார்

சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சீக்கியர்கள் நீதிக்கான  பிரிவினைவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தார். பிராம்ப்டன் நகரில் காலிஸ்தான் வாக்கெடுப்பை ஏற்பாடு செய்யப்பட்டதில்  இவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது, பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதி செய்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

காலிஸ்தான்
 
முன்னதாக, பஞ்சாபில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கனடா  நாட்டை சேர்ந்த அதிகாரிகளை இந்தியா கேட்டுக் கொண்டிருந்த நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் .

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web