மகளிர் குழுவில் லட்சக்கணக்கில் மோசடி... கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை!

 
மகளிர் குழுவில் பணத்தை கையாடல் செய்த தலைவி... கலெக்டரிடம் உறுப்பினர்கள் புகார்!

மகளிர் சுய உதவி குழுவில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக உள்ள பெண்ணை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, பிஎஸ் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் என்பவரது மனைவி உத்திரச்செல்வி. இவர் அந்த பகுதியில் வசித்து வரும் தூய்மை பணியாளராக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்து வரும் அருந்ததியர் இன பென்களை குறி வைத்து வங்கி மூலம் மகளிர் சுய உதவி குழு கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்களிடமிருந்து வங்கி பாஸ்புக், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொண்டு தங்களுக்கு பணம் ஏறியவுடன் தருகிறேன் என்று கூறி ஏமாற்றியுள்ளார்.

மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் முழுவதும் தள்ளுபடி!! அதிரடி அரசாணை வெளியீடு!!

வங்கி கணக்கு துவங்கிய பெண்களின் பெயரில் போலியாக மகளிர் சுய உதவி குழு என்று ஆவணங்கள் தயாரித்து வங்கி மற்றும் நுண் நிதி நிறுவனங்களில் வழங்கி அதன் மூலம் பல லட்ச ரூபாய் கனரா வங்கி, முத்தூட் உள்ளிட்ட தனியார் நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கிக் கொண்டு மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு வழங்காமல் முழு பணத்தையும் வங்கி பாஸ்புக் மற்றும் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி உத்திரசெல்வி எடுத்துக் கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சில மாதங்கள் கழித்து வங்கியில் கடன் தொகை வாங்கியதற்கான மாதத்தவனை மற்றும் வட்டியை கட்டச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வங்கி நிர்வாகம் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் சார்பில் ஊழியர்கள் வீடு தேடி வந்து தொந்தரவு கொடுக்க துவங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களை உத்திர செல்வி ஏமாற்றி மோசடி செய்ததை அறிந்து அவர் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். ஆனால் காவல்துறையினர் உத்தர செல்வியை விசாரணைக்கு அழைத்து எழுதி வாங்கி கொண்டு விட்டு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. 

தூத்துக்குடி

இந்நிலையில் உத்திர செல்வி ஆறுமுகநேரியில் உள்ள தனது வீட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பல லட்ச ரூபாய் பணத்துடன் தலைமுறை வாகி உள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தலைமறைவாக உள்ள உத்தர செல்வியை கைது செய்து தங்கள் பணத்தை மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்னர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை!

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web