திமுகவுக்கு அடுத்த சிக்கல்... ரூ.411 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு.. அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது புகார்!
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜ கண்ணப்பன் பதவி வகித்து வருகிறார். இவர் தனது மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளதாகவும், சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள நிலத்தை அபகரித்து குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
அமைச்சர் திரு ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலமாக ரூ 411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு.
— Arappor Iyakkam (@Arappor) October 22, 2024
அறப்போர் புகார் மற்றும் ஆதாரங்கள் - https://t.co/UDA3QlgKmC
அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் அவர்கள் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூபாய் 411 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் சென்னை ஜிஎஸ்டி… pic.twitter.com/2Qlg5UBuCe
இந்த புகாரின் ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை, முதல்வர் மு.க ஸ்டாலின் , துணை முதல்வர், தலைமை செயலாளர், வருவாய்த்துறை அமைச்சர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோ - நங்கநல்லூர் இடையே உள்ள பரங்கிமலை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ராஜகண்ணப்பன் தனது மகன்கள் மூலம் ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனால் திமுக வட்டாரத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
