நெல்லையில் சட்டமன்றப் பொது நிறுவனங்கள் குழு ஆய்வு!

 
நெல்லை
 


திருநெல்வேலி மாவட்டத்தில் கூடன்குளம் அணுமின் நிலையம், வள்ளியூர் வடலிவிளை காற்றாலை நிலையம் உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தது. 

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், கூடன்குளம் அணுமின் நிலைய வளாகம், வள்ளியூர் வடலிவிளை காற்றாலை, போன்ற இடங்களில் நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் A.P.நந்தகுமார் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், முதன்மைச் செயலாளர் .கி.சீனிவாசன், குழு உறுப்பினர்கள்/ சட்டமன்ற உறுப்பினர்கள் க.அசோகன் (சிவகாசி), ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), மு.பெ.கிரி (செங்கம்), துரை.சந்திரசேகரன் (திருவையாறு), ம.சிந்தனை செல்வன் (காட்டுமன்னார் கோவில்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), த.வேலு (மைலாப்பூர்), முனைவர்.எம்.எச்.ஜவாஹிருல்லா (பாபநாசம்) மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இராதாபுரம் தாலுகா, கூடங்குளம் மற்றும் விஜயாபதி கிராமங்களில் அமைந்துள்ள தி/ள். இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் லிமிடெட்யின் கூடங்குளம் அணுசக்தி திட்டம் 2X1000 மெகாவாட் திறன் கொண்ட அலகு 1 மற்றும் 2 மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது. இந்த ஆலைக்கு 2000 மெகாவாட் (2X1000 மெகாவாட்), மின்சாரத்தை உற்பத்தி செய்ய நிறுவுதலுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு, இயங்கி வருகிறது.

மேலும், இவ்வாலை நாள் ஒன்றுக்கு 5000 கிலோலிட்டர் கடல்நீரை, நன்னீராக்கும் நான்கு நிலையங்களை (அதில் இரண்டு தேவை ஏற்படின் இயக்கும் வகையில்) அமைத்துள்ளது. இதிலிருந்து பெறப்பட்ட நீரைக் கொண்டு அணு உலை இயக்கத்தில் வெளியாகும் வெப்பத்தினை ஏற்று ஆவியாக மாறி விசைப்பொறியினை (Turbine) இயக்கி மின்சாரத்தினை தயாரிக்கப் பயன்படுகிறது. இந்நிறுவனத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த ஆலையில் உருவாகும் சாக்கடை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு பசுமை வளாகம் அமைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாரியத்தால் தொழிற்சாலையிலிருந்து மாதந்தோறும் கழிவுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவது குறித்து சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் அணுமின் திட்ட அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து, இராதாபுரம் வட்டம் வள்ளியூர் வடலிவிளை பகுதியில் தமிழ்நாட்டின் மரபு சாரா எரிசக்தி துறையின் பங்களிப்பின் இந்தியாவின் முதல் முறையாக குறைவான காற்று வீசும் இடங்களில் ரூ.32.4 கோடி செலவில் 4.2 மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள காற்றாலை WEG Industries Pvt Ltd மூலம் முன்மாதிரியாக 17.10.2022 அன்று வள்ளியூர் வடலிவிளை பகுதியில் நிறுவப்பட்டது. இதன் மூலம் 21.10.2024 வரை 11.13 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. 

காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரமானது 33 கி.வோ. தனி மின்பாதை வழியாக வள்ளியூர் 110/33-11 கேவி துணைமின் நிலையத்தில் மின்கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகமான மின்சாரம் கிடைக்கும் பட்சத்தில் இதே போன்று காற்று குறைவாக வீசும் இடங்களில் காற்றாலை நிறுவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் செயல்பாடுகள் குறித்தும், தணிக்கைப் பத்திகள் மற்றும் தன்னாய்வு குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு (2024-2025) தலைவர் A.P.நந்தகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அனுமின் நிலையத்தில் இன்று ஆய்வு நடத்தப்பட்டது. கூடன்குளம் அனுமின் நிலையம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து அனுமின் நிலைய அலுவலர்கள் தெளிவாக எடுத்துரைத்தார்கள். அனுமின் நிலையம் கட்டுவதற்கு இடம் கொடுத்தவர்களுக்கு கிட்டதட்ட 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை அளித்துள்ளார்கள். 

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அவர்களும் கோரிக்கை அளித்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கையினை இந்த சட்டமன்ற குழு உறுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று இடம் வழங்கியவர்களுக்கு கட்டாயமாக வேலை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காற்றாலை எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

குறைந்த காற்றில் அதிக மின்சாரம் தயாரிப்பது குறித்து சோதனை முயற்சியில் ஒரு காற்றாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்யப்பட்டது. பத்திகளை எப்படி நிறைவு செய்வது என்பது குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. பணிகளை விரைந்து முடிப்பதற்கு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!