லியோ 2 அப்டேட் குறித்து லோகேஷ் கனகராஜ்!

 
லியோ2
 

 
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஓராண்டுக்கு முன்பு வெளியான திரைப்படம் லியோ.  கலவையான விமர்சனங்களை இந்தப்படம் பெற்றாலும் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனைகொண்டாடும் வகையில் இப்படத்தை தயாரித்த seven screen studio லியோ 2 அறிவிப்பை தான் படக்குழு வெளியிட இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்

லியோ
 அதன் பிறகு விஜய் GOAT படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வரும் நிலையில் இதன் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார்.  இந்நிலையில் தளபதி 69 திரைப்படம் தான் விஜய்யின் கடைசி படம் என்பதால் கண்டிப்பாக அவர் லியோ 2 படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகின்றது. ஆனால் எதிர்காலத்தில் விஜய் தன் முடிவை மாற்றும் வகையில் லியோ 2 உருவாகும் வாய்ப்பு அதிகம் என்கின்றன.  

லியோ
அப்படி லியோ 2 அறிவிப்பாக இல்லை என்றால் படக்குழு வேறெந்த அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.  லியோ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான நிலையில்  கதை மற்றும் திரைக்கதையில் சில குறைகள் இருந்ததால் இப்படம் எதிர்பார்த்த விமர்சனங்களை பெறவில்லை என்றே நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்து பேசியிருந்தார்.படத்தில் சில குறைகள் இருந்ததையும், இரண்டாம் பாதியை கொஞ்சம் வேறு விதமாக எடுத்திருக்கலாம் என்றும் விமர்சனங்களை ஏற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web