பெருசுக்கு குசும்ப பாருங்க.. கர்வா செளத் பண்டிகையில் மியா கலீபா போட்டோவை பார்த்த முதியவர்!

 
முதியவர்

வட இந்தியாவில், பெண்கள் தங்கள் கணவர்களின் ஆயுளை நீட்டிக்க வலியுறுத்தி கர்வா செளத் எனப்படும் விரதத்தை கடைபிடிப்பது வழக்கம். இந்த விரதத்தின் போது பெண்கள் தங்கள் கணவனின் முகத்தை வட்ட வடிவ சல்லடையின் மூலம் பார்ப்பார்கள். திருமணமாகாத பெண்கள் சந்திரனை பார்ப்பார்கள். அந்த சந்திரன் சிவபெருமானின் தலையில் இருக்கும் சந்திரனைக் குறிக்கிறது. இதைப் பார்த்து பெண்கள் விரதத்தை முடிப்பது வழக்கம்.



இந்நிலையில் வட இந்தியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் சல்லடை போன்ற பாத்திரத்தில் தீபம் ஏற்றி சல்லடை வழியாக நடிகை மியா கலீபாவை கர்வா சவுத் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பார்ப்பது போல் பார்த்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதியவரின் இந்த செயலை பார்த்த பலரும் சிரிப்பை அடக்க முடியவில்லை என்றும் வேடிக்கையாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தத்தாவின் இந்த செயலுக்கு இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், மேலும் இதை வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web