ஒரே வருஷத்துல ரூ.22,400 கோடி இழப்பு... பைரஸியால் கதறும் திரையுலகம்!

 
வீடியோ பைரஸி மூவி படம் டவுன்லோடு

ஒரே வருஷத்துல வீடியோ பைரஸியால் ரூ.22,400 கோடி இழப்பு என்றால், எந்த துறையாக இருந்தாலும் கலங்க தானே செய்வார்கள். இந்திய பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்தவர்கள் கதறுகிறார்கள். இது பொருளாதார நஷ்டத்தோடு அறிவு திருட்டு என்பதால் கிடைக்கிற புகழ் வெளிச்சமும் பறிபோகிறது. யெஸ் என்ன தான் ஓடிடி, திருட்டு வீடியோக்களில் படம் ஓடினாலும், திரையரங்குகளில் இத்தனை நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகள், இத்தனை நாட்களில் இத்தனைக் கோடி வசூல் என்கிற டேட்டாக்கள் தான் அவர்களுடைய அடுத்தடுத்த படங்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்றன. 

கடந்த 2023ல் ஒரு வருட இழப்பீடு ரூ.22,400 கோடி என்றால், ஒவ்வொருவருடமும் அறிவுசார் திருட்டு எத்தகைய இழப்பை ஏற்படுத்தி வருகிறது என்று புரிந்துக் கொள்ளுங்க. வீடியோ பைரஸிக்கு தீர்வு காண பல திட்டங்களையும், சங்கங்களின் ஒத்துழைப்பையும் பெற்றிருந்த போதினும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற ஆன்லைனில் படங்களை டவுன்லோட் செய்பவர்களால் திரைத்துறையினருக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது.இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவதைத் தடுக்க, வலுவான கட்டுப்பாடுகள் மற்றும் கூட்டு முயற்சிகள் தேவை என்பதை வலியுறுத்துகிறது.

இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI) வழங்கிய "தி ராப் ரிப்போர்ட்" அறிக்கையின் படி, இந்தியாவில் 51 சதவீத ஊடக நுகர்வோர் திருட்டு ஆதாரங்களில் இருந்து திரைப்படத்தைப் பார்க்க துணிகின்றனர். இப்படி முறையில்லாமல் படங்களை வெளியிடும் ஸ்ட்ரீமிங் சேவைகள் 63 சதவீத மக்களிடையே பயன்பாட்டை அதிகரித்து மிக முக்கியமான பங்களிப்பை வழங்குகின்றன என்கிற அதிர்ச்சியும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வீடியோ பைரஸி

"இந்தியாவின் திருட்டுப் பொருளாதாரத்தின் அளவு 2023ல் ரூ. 22,400 கோடியாக இருந்துள்ளது. இது இந்தியாவின் மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையால் உருவாக்கப்பட்ட பிரிவு வாரியான வருவாய்க்கு எதிராக 4வது இடத்தைப் பிடித்துள்ளது.இதில் ரூ.13,700 கோடி திரையரங்குகளில் இருந்து திருட்டு வீடியோக்களிலிருந்தும், ரூ.8,700 கோடி ஓடிடி பிளாட்ஃபார்ம்களின் உள்ளடக்கத்திலிருந்தும் பெறப்பட்டுள்ளது. ரூ. 4,300 கோடி வரை ஜிஎஸ்டி இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

திருட்டு என்பது இசை, திரைப்படங்கள், மென்பொருள் மற்றும் பிற அறிவுசார் சொத்துக்களை உள்ளடக்கிய பதிப்புரிமை பெற்ற பொருட்களை அங்கீகரிக்கப்படாத நகலெடுப்பது, விநியோகித்தல் அல்லது பயன்படுத்துவதைக் குறிக்கிறது.கோடிக்கணக்கில் செலவழித்து தயாரிக்கப்பட்டு, திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்களில் ஆயுள் அதிகபட்சமாக ஒரு நாளாக தான் இருக்கிறது. அடுத்த நாளோ அன்றைய இரவோ அதே திரைப்படம் ஆன்லைனில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதை எந்த தயாரிப்பாளராலும், தனிப்பட்ட சங்கங்களாலும் தடுக்க முடியவில்லை. பிறமொழி திரைப்படங்களை விட இதில் அதிகளவில் தமிழ் படங்களே பாதிக்கப்படுவதாகும் கூறப்படுகிறது. பிறமொழி படங்களில் சங்கங்களின் செயல்பாடுகள் வலிமையானதாகவும், தொடர்ந்து வீடியோ பைரஸிக்கு எதிரான செயல்பாடுகளும் இருந்து வரும் நிலையில், தமிழ் திரைப்படங்கள் தடுமாறுகின்றன.

படத்தின் லோ குவாலிட்டி பதிப்பை ஆன்லைனில் பார்த்துவிட்டு, இதை திரையரங்கில் பார்ப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளதும் கவனிக்கப்பட வேண்டியது.குறிப்பாக 19 முதல் 34 வயதிற்குட்பட்ட இளம் பார்வையாளர்களிடையே திருட்டுத்தனமாக ஆன்லைனில் திரைப்படங்களைப் பார்ப்பது அதிகரித்துள்ளதாகவும், பெண்கள் ஓடிடி நிகழ்ச்சிகளை விரும்புவதாகவும், ஆண்கள் கிளாசிக் திரைப்படங்களை நோக்கி ஈர்க்கப்படுவதாகவும் அறிக்கை கூறியுள்ளது.

வீடியோ பைரஸி

சுவாரஸ்யமாக, திருட்டு உள்ளடக்கத்தை அணுகுபவர்களில் 64 சதவீதம் பேர், விளம்பரம் குறுக்கீடுகள் இருந்த போதிலும், இலவசமாக வழங்கப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட சேனல்களுக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர்கள் உட்பட உள்ளடக்க வழங்குநர்கள் தங்கள் விலை மாதிரிகள் மற்றும் அணுகல் உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இந்த அறிக்கை வலியுறுத்தி உள்ளது. ஏறக்குறைய 70 சதவீத திருட்டு உள்ளடக்க நுகர்வோர் எந்த ஓடிடி சந்தாக்களையும் வாங்க விரும்பவில்லை என்று கூறியதாக அறிக்கை கூறியுள்ளது.

திரைப்பட திருட்டு ஒளிப்பரப்புக்கு எதிரான தற்போதைய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அறிக்கை, திருட்டு உள்ளடக்கத்தின் உருவாக்கம் மற்றும் விநியோகத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதும் முக்கியமானதாக இருக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இது அசல் படைப்பாளிகள் தங்கள் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாக்கவும், தங்களுக்குச் சொந்தமானதைப் பணமாக்கவும் முடியும் என்பதை இது உறுதி செய்யும்" என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்."அங்கீகரிக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கான வரையறுக்கப்பட்ட வழிமுறைகள், திருட்டு உள்ளடக்கத்தை எளிதாக அணுகுதல், திருட்டு அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் அணுக முடியாத திரையரங்குகள் ஆகியவை இந்த மாறுபாட்டிற்கு சில காரணங்கள். 

பயனர்கள் பொதுவாக பழைய படங்களைப் பார்ப்பதற்காக திருட்டு உள்ளடக்கத்தை அணுகுகிறார்கள். நகரங்களைச் சேர்ந்தவர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்ட திரைப்படங்களின் முறைகேடான பதிப்புகளைப் பார்க்கும் போது, ​​மீண்டும் டிக்கெட்டுகளுக்குப் பணம் செலுத்த விரும்பாததைக் காட்டுகிறது" என்று அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web