முகமூடி அணிந்து கொள்ளையடிக்க வந்த டவுசர் கொள்ளையர்கள்.. கையும் களவுமாக பிடித்த போலீசார்!

 
திருட்டு நகைகள் கொள்ளை

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (63). இவர் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் இருந்தபோது இரவு நான்கு பேர் ‘டவுசர்’ முகமூடி, அணிந்து  கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு கொள்ளையடிக்க வந்தனர். வீட்டில் இருந்த மின்விளக்கு போட்டபோது அக்கும்பல் ஓட்டம் பிடித்தனர். ‘சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை வைத்து, ஆத்தூர் நகர  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

காரில் வழிப்பறி கொள்ளை!! மக்களே உஷார்!! இப்படியும் நடக்கலாம்!!

மேலும் ஆத்தூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். விசாரணையில் தேனி மாவட்டம் பெரியகுளம், செம்மங்குடி பகுதியை சேர்ந்த, செல்வராஜ் மகன் செல்லமுத்து (26), ராமநாதபுரத்தை சேர்ந்த, ராஜன் மகன் அருள்ராஜ் (33 ) உள்பட நான்கு பேர் என்பது தெரியவந்தது. இதில் செல்லமுத்து, அருள்ராஜ் ஆகியோரை, ஆத்தூர் நகர  போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, ‘ஆத்தூர் பகுதியில் கொள்ளையடிப்பதற்காக வந்த நான்கு பேர், வீட்டில் இருந்த நபர் மின்விளக்கு போட்டதால் அங்கிருந்து ஓடினர். தேனி, ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை கைது செய்து, விசாரணை செய்யப்பட்டது. இவர்கள், தூத்துக்குடி, திண்டுக்கல், சாத்தான்குளம், தேவக்கோட்டை, காளையார்கோவில் பல்வேறு ஊர்களில், முகமூடி அணிந்து திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இருவர் மீதும் தலா 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன இவ்வாறு கூறினர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web