பிரண்டையின் மருத்துவ குணங்கள்!!

 
பிரண்டை

இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு பிரண்டை என்றாலே என்னவென்று தெரியாது. ஆனால் இதில் நிறைந்திருக்கும் மருத்துவக்குணங்களை அறிந்தால் தேட தொடங்கிவிடுவர சூப்பர் மார்க்கெட்  மட்டுமல்ல சாதாரண காய்கறிக் கடைகளிலும் பிரண்டையை காணவே முடியாது. கீரை கடைகளில் அரிதாக வைத்திருப்பர். இதனை  துவையலாக்கி சாப்பிட்டால் தீராத வயிற்று பிரச்சனைகளும் தீரும் என்கின்றனர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள்.

வேலியோரங்களில் நீளமான தண்டாக உயர வளர்ந்திருக்கும் பிரண்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. மிக முக்கியமாக வளரும் பிள்ளைகளின் எலும்புகளுக்கு பலம் சேர்க்க வல்லவை. 40 வயது கடந்தவர்களுக்கு உருவாகும் எலும்பு தேய்மானப் பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக அமையக் கூடியது இந்த பிரண்டை.

உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க செய்ய இதை உணவில் சேர்த்துக்கோங்க!


இது தவிர பல் ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தவல்லவை. வயிற்றின் செரிமானப் பிரச்சனைகளுக்கும், வாயுப் பிடிப்பை போக்குவதிலும், உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை குறைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.வாய் புண், வாய் நாற்றம், உதடு, நாவில் உருவாகும் வெடிப்பு பிரச்சனைகளுக்கு சிறிதளவு வெண்ணெயில் பிரண்டையை சேர்த்து சாப்பிட்டு வர குணம் காணலாம். இரு வேழை மூன்று நாள் கொடுக்க குணமாகும்.

உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க செய்ய இதை உணவில் சேர்த்துக்கோங்க!


மூலம், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருப்பின் பிரண்டை உப்பை 3 கிராம் அளவு வெண்ணெயில் 48 நாட்கள் கலந்து கொடுக்க விரைவில் குணம் அடையலாம்.
3 பங்கு பிரண்டையை ஒரு பங்கு உப்புடன் அரைத்து அடை வடிவில் தட்டி மண் குடுவையில் வைத்து புடம் போட்டு எடுக்க சாம்பல் நிற உப்பாக மாறி இருக்கும் . இதுவே பிரண்டை உப்பு.
இந்த பிரண்டை உப்பை சிறிதளவு பசும் பாலில் கலந்து குடித்து வர 45 நாட்களில் உடலில் உள்ள தேவையற்ற ஊளைச் சதைகளை குறைக்கும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web