ஜாலி... இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

 
மழை

 தமிழகத்தில் இன்று  ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில்  இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். அக்டோபர் 31க்கு பிறகு  வானிலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். அதனால், நவம்பர் 1 முதல், சில மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவடையும்.

மழை


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 2  நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசானது  முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை   மாவட்டங்களில்  புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!