பெற்ற குழந்தையின் கழுத்தை அறுத்த தாய்.. போக்சோவில் கொத்தனார் கைது.. பகீர் பின்னணி!

 
அபிநயா

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சுக்காம்பட்டி சாலையில் நேற்று இரவு குழந்தை கத்தும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பார்த்தபோது கழுத்து, கைகள் வெட்டப்பட்ட நிலையில் பிறந்த சில தினங்களே ஆன ஆண் குழந்தை கிடந்தது. மரியம் பீவி என்பவர் குழந்தையை மீட்டு சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை

இதுகுறித்து திருப்பத்தூர் டிஎஸ்பி செல்வகுமார் சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் கவிதா உதவி ஆய்வாளர் லெனின் தீவிர விசாரணை நடத்தி, அதே பகுதியை சேர்ந்த அபிநயா (வயது 18) என்பவரை கண்டுபிடித்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், அவரது வீட்டின் அருகே வசிக்கும் திருமணமான கொத்தனார் மகேந்திரன் (வயது 42) என்பவர் தன்னை வற்புறுத்தி பலாத்காரம் செய்ததாகவும், அதன் காரணமாக பிறந்த குழந்தையின் கழுத்தை அறுத்து வீசி எறிந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

கைது

இதையடுத்து, 10 மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமி அபிநயாவை பலாத்காரம் செய்ததாக கொத்தனார் மகேந்திரனை போலீஸார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.  இந்நிலையில் பெஏஏஅ குழந்தையை கொல்ல முயன்றதாக அபிநயாவும் கைது செய்யப்பட்டார். இது குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!