தென்பெண்ணை ஆற்றில் மலைபோல் குவிந்திருக்கும் நுரை.. பீதியில் மக்கள்!

ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 4,160 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, தமிழக எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 4,160 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், ஓசூர்-நந்திமங்கலம் சாலையில் தட்டகானப்பள்ளி அருகே உள்ள ஆற்றின் தரைப்பாலம் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது.
தரைப்பாலத்தின் மீது 5 அடி உயரத்துக்கு ஆற்று நீர் பெருக்கெடுத்துள்ளதாலும், ராட்சத நுரைகள் பல அடி உயரத்துக்கும் நிற்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிப்காட் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் ராட்சத நுரையில் செல்ஃபி எடுத்து விளையாடுகின்றனர்.
தட்டனப்பள்ளி, சித்தனப்பள்ளி, தேவிசெட்டிப்பள்ளி உட்பட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், 15 கி.மீ., தூரம் சென்று, ஓசூருக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆற்றில் உபரி நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதோடு, ராட்சத நுரைகள் ஆற்றில் கலப்பதால், அணையின் கரையோர கிராம மக்களுக்கு 7வது நாளாக வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அணையின் நீர்மட்டம் 1000 கனஅடியை தாண்டினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரவிருக்கும் 4160 கனஅடி தண்ணீர் அணையின் பாதுகாப்பு கருதி முழுமையாக தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் வந்து தரைப்பாலத்தில் சுமார் 30 அடி உயரத்திற்கு தேங்கியிருந்த ராட்சத நுரையை அகற்றி தண்ணீர் தெளித்து அகற்றும் பணியை தொடங்கினர். மேலும், பலர் நுரை காட்சிகளை பார்த்து வியந்து செல்ஃபி எடுத்து கொள்கின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!