’என் மனைவி ஒரு திருநங்கை’.. பாலினத்தை கண்டறிய நீதிமன்றத்தை நாடிய கணவர்.. அதிர்ச்சி பின்னணி!

மத்திய அரசு மருத்துவமனையில் தனது மனைவிக்கு பாலின பரிசோதனை நடத்த டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "திருமணத்திற்கு முன் பாலின மாற்றம் குறித்து என் மனைவி எதுவும் கூறவில்லை. என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். திருநங்கை என மறைத்து திருமணம் செய்தது எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்," என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த வழக்கறிஞர் அபிஷேக் குமார் சவுத்ரி, “ஒரு தனிநபரின் பாலினம் அல்லது பாலின அடையாளம் அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும், திருமணம் என்று வரும்போது ஒருவரையொருவர் அறிந்து கொள்வது அவர்களின் உரிமை. ஆரோக்கியமான திருமண வாழ்க்கையைப் பேணுவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள இரு நபர்களின் வாழ்வுக்கான அடிப்படை உரிமையை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு முன், நியாயமான விசாரணை மற்றும் உண்மைகளைத் தீர்மானிப்பதற்கான உரிமை தனக்கு இருப்பதாக மனுதாரர் வலியுறுத்தினார். இதனையடுத்து மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உரிய விசாரணை மூலம் உண்மையைக் கண்டறிவது மனுதாரரின் உரிமை என குறிப்பிட்டது.
மேலும், தேர்வில், மனைவி பெண்ணாக தகுதி பெறவில்லை என்றால், மனுதாரர் பராமரிப்பு செலவுகளை செலுத்தவோ அல்லது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவோ தேவையில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மனுதாரர் சிவில் நடைமுறைச் சட்டத்தின் 151வது பிரிவின் கீழ் தனது மனைவியைப் பரிசோதிக்க மருத்துவக் குழுவை அமைக்கக் கோரியிருந்தார். ஆனால், அவரது மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!