நாகசைதன்யா- துலிபாலா ஜோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!
நாக சைதன்யா-சோபிதா துலிபாலா ஜோடி நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெற்றது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவர்கள் ஜோடியாக எடுத்துக்கொண்ட செல்பிக்கு நெகடிவ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. அக்கினேனி குடும்பத்தின் புதிய மருமகளைப் பற்றி பல விவாதங்கள் தொடங்கியுள்ளன. தற்போது மேலும் ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

முன்னதாக நாக சைதன்யா - சோபிதா துலிபாலா காதலிப்பதாக கூறினர். இருவரும் பலமுறை வெளிநாடுகளில் ஜோடியாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின. டேட்டிங் வதந்திகளை உண்மையாக்கும் வகையில் நாக சைதன்யா சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அக்கினேனி நாகார்ஜுனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நாகார்ஜுனா நிச்சயதார்த்தப் புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு திருமணத்திற்கு இன்னும் சிறிது காலம் இருப்பதாகத் தெரிவித்தார். நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு முதல்முறையாக நாக சைதன்யா, சோபிதா இருவரும் ஜோடியாக லிஃப்டில் செல்பி எடுத்த புகைப்படம் வைரலாகிறது.

அந்த புகைப்படத்தில் கருப்பு உடையில் கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக இருக்கிறார்கள். நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு சோபிதா துலிபாலா சமூக வலைதளங்களில் கடுமையாக டிரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் சோபிதா உடன் எடுத்த செல்பி புகைப்படத்தை முதன்முறையாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள நாக சைதன்யாவை நெட்டிசன்கள் கமெண்டில் கழுவி ஊற்றி வருகின்றனர். இருவரும் ஒர்ஸ்ட் ஜோடி என கிண்டலடித்து வருகின்றனர். இது டோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாக சைதன்யா 2017ல் சமந்தாவை காதலித்து கரம்பிடித்த நிலையில் 4 ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். சமந்தா உடனான பிரிவுக்கு பின்னர் சோபிதா உடன் டேட்டிங் செய்ய தொடங்கினார். திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
