க்யூட் வீடியோ... நயன்தாரா பேரை சொல்லி அழைக்கும் குட்டி சிறுவன்!
தமிழ் திரையுலகில் 'ஐயா' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா . இவர் தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக , பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து வருகிறார். பாலிவுட்டில் இவர் நடித்த ஜவான் திரைப்படம் ரூ1000கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றார்.
A cute boy calling #Nayanthara in shooting spot. She responded to her cute little fan. 🔥😍😍🤩🤩🤩
— Dreamer (@remaerdkihtraK) October 26, 2024
Very cute 😍😍#DearStudents #LadySuperstar pic.twitter.com/UiT0CBYqap
நயன் தாரா தற்போது, யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்திலும், மலையாளத்தில் நிவின் பாலியுடன் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், டியர் ஸ்டூடண்ட்ஸ் படப்பிடிப்பு தளத்தில் நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் நடிகை நயன்தாரா, சிறிய வயது ரசிகர் ஒருவருடன் சைகையில் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், நயன்தாரா இரவு நேர படப்பிடிப்பில் ஈடுபட்டார். அப்போது சிறுவன் ஒருவன் நயன்தாராவின் பெயரை சத்தமாக கத்துகிறான். இதனை பார்த்த நயன்தாரா சைகையில், சாப்பிட்டாயா, போய் தூங்கு எனக் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
