வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... 48 மணி நேரத்தில் புயலாக மாறும்!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி


 
வங்கக்கடலில் புதிய  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என    தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்திய வானிலை மையம்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வடக்கு அந்தமானை ஒட்டிய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

காற்றழுத்த தாழ்வு பகுதி


காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 48 மணி நேரத்தில், புயலாக மாறி மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும். நாளை மறுநாள் வலுவடைந்து 'டானா' புயலாக வலுப்பெறும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி

அக்டோபர் 24ம் தேதி மேற்குவங்கம், ஒடிசா கடற்கரையை ஒட்டி, 'டானா' புயல் கரையைக் கடக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் முதல் புயல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!